Homeசெய்திகள்சினிமாஎழில் இயக்குநராகி 25 வருடங்கள்... சென்னையில் விழா ஏற்பாடு...

எழில் இயக்குநராகி 25 வருடங்கள்… சென்னையில் விழா ஏற்பாடு…

-

எழில் இயக்குநராகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை, சென்னையில் விழா நடத்தி கொண்டாட உள்ளனர்.

துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை எந்த கோலிவுட் ரசிகராலும அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. விஜய், சிம்ரன் ஆகியோர் நடித்த இப்படத்தின் மூலம் தான் இயக்குநர் எழில் இயக்குநராக அறிமுகம் ஆகினார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. படத்திற்கு ராஜ்குமார் அசை அமைத்திருந்தார். இப்படம் வௌியாகி 25 ஆண்டுகள் நிறைவு அடைய உள்ளன. இதை கொண்டாடும் விதமாக எழில் 25 என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

தயாரிப்பாளர் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இதில் எழில் இயக்கிய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதே விழாவில் வைத்து எழில் அடுத்ததாக இயக்கும் தேசிங்கு ராஜா 2 படத்தின் முதல் தோற்றத்தையும் வௌியிட உள்ளனராம். எழில் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தேசிங்கு ராஜா. இப்படத்தில் விமல் நாயகனாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக பிந்துமாதவி நடித்தார். சூரி, சிங்கம் புலி, உள்பட பலர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தேசிங்கு ராஜா பாகம் 2 தற்போது உருவாகி வருகிறது. இதில் நடிகர் விமல் ஹீரோவாக நடிக்க, தெலுங்கு நடிகைகள் பூஜிதா, ஹர்ஷிதா நாயகிகளாக ஒப்பந்தம் ஆகியிருக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில், ஜனா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்படபலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

MUST READ