Homeசெய்திகள்சினிமாபகலிலும், மதியத்திலும் ஸ்டார் ஒளிர்கிறது... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்... பகலிலும், மதியத்திலும் ஸ்டார் ஒளிர்கிறது… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்…
- Advertisement -

டாடா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ஸ்டார். இத்திரைப்படத்தை பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற இளன் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், ரசிகர்கள் இடையே ஏகபோக வரவேற்பு கிடைக்கிறது. நல்ல விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. வசூல் ரீதியாக சுமார் 15 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. படம் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில், கூடுதல் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞன் சினிமாவுக்குள் நுழைவதற்குள் படும் துன்பங்களை வௌிச்சம் போட்டு காட்டுகிறது ஸ்டார் திரைப்படம்.

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து படத்தின் இயக்குநர் இளன் நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதல் நாள் காட்சியில் ஒருவர் தன்னை கட்டிப்பிடித்ததாகவும், திரையரங்கை சுத்தம் செய்யும் பெண் ஒருவர் அவரை சுத்திப்போட்டதாகவும், பல இடங்களில் கை தட்டலும், கரகோஷமும் எழுந்ததையும் குறிப்பிட்டுள்ளார். ஒரு சில விமர்சனங்கள் ஒரு கலைஞனாய் தன்னை மெருகேற்ற உதவுவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.