மாலிவுட்டில் அறிமுகமாகிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா!
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளார். சவுதி வெள்ளக்கா, ஆப்பரேஷன் ஜாவா படங்களை இயக்கிய தருண் மூர்த்தி இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் 70, 80, 90 காலகட்டத்தில் சிவாஜி, ரஜினி, கமல் என தமிழில் மூத்த மற்றும் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வெற்றி இயக்குநராக வலம் வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
ஆரம்ப காலகட்டத்தில் இயக்கத்தை தாண்டி அவ்வப்போது கௌரவத் தோற்றத்திலும் தனது படங்களில் தோன்றினார் பாரதிராஜா. பின் நாளில் சூர்யாவின் ஆயுத எழுத்து திரைப்படத்தில் செல்வநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
அதனை தொடர்ந்து பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை, ராக்கி உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த தாத்தா கதாபாத்திரம் அனைவரும் ரசிக்கும்படியாகவும் அமைந்தது.
https://www.apcnewstamil.com/news/cinema-news/ayothi-movie-team-reunite-for-their-next-movie/84879
இந்நிலையில் தமிழில் மட்டுமே நடித்து வந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா மலையாள திரை உலகில் அறிமுகம் ஆக உள்ளார். சவுதி வெள்ளக்கா, ஆப்பரேஷன் ஜாவா படங்களை இயக்கிய தருண் மூர்த்தி அடுத்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் உடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இதில் மோகன்லால் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.