இயக்குனர் கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவியை பாராட்டி பேசியுள்ளார்.இயக்குனர் கிருத்திகா உதயநிதி தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர் இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் காளி என்ற படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது இவர் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது.
அதே சமயம் இந்த படத்தில் இருந்து ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படத்தில் ஜெயம் ரவியை விட நித்யா மேனனின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. அதன்படி இந்த படமானது இன்றைய தலைமுறையினரின் காதல் எப்படி இருக்கிறது என்பதையும் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்தும் பேசும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி, ஒரு பெண் இயக்குனருடன் காதலிக்க நேரமில்லை படத்தில் பணியாற்றியதானால் இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று கூறியிருக்கிறார். மேலும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவியை பாராட்டி பேசியுள்ளார்.
அதாவது இந்த படத்தில், நித்யா மேனன் பெயருக்கு அடுத்து தான் ஜெயம் ரவியின் பெயர் போடப்பட்டிருக்கும். எனவே நித்யா மேனன் பெயரை முதலில் போடுவதற்கு ஜெயம் ரவி ஒப்புக்கொண்டதற்காக அவரை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் கிருத்திகா உதயநிதி. அடுத்தது, “இந்த படத்திற்காக ஆண்கள், பெண்கள் என அனைவரும் இணைந்து பணியாற்றி இருந்தோம். இது போன்ற விஷயங்கள் நம் துறைக்கு ஒரு மாற்றத்தை கொண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
- Advertisement -