Homeசெய்திகள்சினிமாபிரபல இயக்குநரின் சகோதரர் மரணம்... திரையுலகினர் இரங்கல்...

பிரபல இயக்குநரின் சகோதரர் மரணம்… திரையுலகினர் இரங்கல்…

-

பிரபல இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் உயிரிழந்துள்ளார். திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லிங்குசாமி. மம்மூட்டி, முரளி ஆகியோர் நடிப்பில் உருவான ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக சினிமாவிற்கு அறிமுகமானவர் லிங்குசாமி. இதைத் தொடர்ந்து மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த ரன் படத்தை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் பையா படத்தை இயக்கி வெற்றி பெற்றார், வேட்டை உள்பட பல திரைப்படங்களை அவர் இயக்கி இருக்கிறார்.
வழக்கு எண் 18 9, கமலின் உத்தம வில்லன் ஆகிய பல படங்களை தயாரித்தும் உள்ளார். லிங்குசாமிக்கு ராதாகிருஷ்ணன், கேசவன் என்ற இரு அண்ணன்களும், சுபாஷ் என்ற தம்பியும் உள்ளனர். இதில் இரண்டாவது அண்ணன் கேசவன் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். கும்பகோணம் அருகே குடவாசலில் வசித்து வந்த அவர் மளிகை கடை நடத்தி வாழ்ந்து வந்தார். சென்னையில் லிங்குசாமியுடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை கவனித்தும் வந்தார்.

இந்நிலையில், இன்று லிங்குசாமியின் அண்ணன் கேசவன், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லிங்குசாமிக்கு திரைத்துறையினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ