Homeசெய்திகள்சினிமா'பையா' படத்தில் எங்களின் முதல் தேர்வு தமன்னா இல்லை..... இயக்குனர் லிங்குசாமி!

‘பையா’ படத்தில் எங்களின் முதல் தேர்வு தமன்னா இல்லை….. இயக்குனர் லிங்குசாமி!

-

- Advertisement -

இயக்குனர் லிங்குசாமி நடிகை தமன்னா குறித்து பேசி உள்ளார்.'பையா' படத்தில் எங்களின் முதல் தேர்வு தமன்னா இல்லை..... இயக்குனர் லிங்குசாமி!

இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் ரன், சண்டைக்கோழி என தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் லிங்குசாமி மகாபாரத கதையை மையமாக வைத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 'பையா' படத்தில் எங்களின் முதல் தேர்வு தமன்னா இல்லை..... இயக்குனர் லிங்குசாமி!இந்நிலையில் இவர் பையா படம் குறித்து பேசி உள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பையா. லிங்குசாமி இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது தமன்னா இல்லை என கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது, “பையா படத்தில் நடிக்க நாங்கள் முதலில் தேர்வு செய்த நடிகை நயன்தாரா தான். கடைசி நேரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் தமன்னாவை தேர்ந்தெடுத்தோம். தமன்னா பையா படத்தில் நடிக்கும் போது 19லிருந்து 20 வயது தான் இருக்கும். மிகவும் நேர்மையானவர். அர்ப்பணிப்புடையவர். சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வந்துவிடுவார். அப்போது அவரிடம் நீ கரீனா கபூர் மாதிரி வருவாய் என சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

MUST READ