இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெருசு படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார்.
வைபவ், சுனில் ரெட்டி, நிஹாரிகா, தீபா, முனீஸ்காந்த், பாலசரவணன் ஆகியோரின் நடிப்பில் நேற்று (மார்ச் 14) திரைக்கு வந்த படம் பெருசு.
இளங்கோ ராம் இயக்கியிருந்த இந்த படத்தினை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு அருள்ராஜ் இசையமைக்க சத்ய திலகன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். சூரிய குமாரகுரு எடிட்டிங் பணிகளை கவனித்திருந்தார். வித்தியாசமான கான்செப்டில் அடல்ட் காமெடி படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் வைபவ், சுனில் ஆகியோரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
What made everyone go “Chi!?” 😂
Here’s Sneak Peek – 2 from #Perusu!
Want to know why? Get ready for more fun – watch Perusu in theatres near you! 🎬🤣
🎟️ Book your tickets now!!https://t.co/jlKOynTyTN@actor_vaibhav @sunilreddy22@ilango_ram15 @kaarthekeyens#HarmanBaweja… pic.twitter.com/DvJp6SNqYQ
— Stone Bench (@stonebenchers) March 15, 2025
எனவே இனிவரும் நாட்களிலும் ரசிகர்களின் ஆதரவும் படத்தின் வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெருசு படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Hearing great response for #Perusu 🤗
Super happy for the team and my hearty congratulations to @karthiksubbaraj sir, @actor_vaibhav bro, @sunilreddy22,@ilango_ram15 and the entire cast and crew of #Perusu ❤️❤️@kaarthekeyens @JustNiharikaNm @IamChandini_12 @kingsleyreddin…
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 15, 2025
அந்தப் பதிவில், “பெருசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதை கேள்விப்பட்டேன். இது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும் கார்த்திக் சுப்பராஜ், வைபவ், சுனில் ரெட்டி, இளங்கோ ராம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.