Homeசெய்திகள்சினிமாஇயக்குநராக விருப்பப்பட்ட தம்பியை செருப்பால் அடித்தேன்... டெவில் விழாவில் மிஷ்கின் பரபரப்பு பேச்சு...

இயக்குநராக விருப்பப்பட்ட தம்பியை செருப்பால் அடித்தேன்… டெவில் விழாவில் மிஷ்கின் பரபரப்பு பேச்சு…

-

- Advertisement -
தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கில் இயக்குநர்கள் உள்ளனர். அவற்றில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் சிலர் முன்னணி இயக்குநர்களாக உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க நபர் மிஷ்கின். டாப் இயக்குநராக வலம் வரும் அவர், மற்ற இயக்குநர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்க முக்கிய காரணம் அவரது திரைப்படங்கள்தான். காதல், காமெடி என வெறும் கமர்ஷியல் படங்களை இயக்காமல் தனக்கென தனி ஸ்டைலில் ராவாக படம் இயக்குவதில் கை தேர்ந்தவர் மிஷ்கின். அண்மையில் கூட கமர்ஷியல் படங்களை இயக்கும் சூழல் வந்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன் தெரிவித்திருந்தார்.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, சைக்கோ, பிசாசு ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோரின் நடிப்பில் ‘பிசாசு 2’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனராக இருக்கும் இவர் தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘சவரக்கத்தி’ பட இயக்குனரும், மிஷ்கினின் சகோதரருமான ஜிஆர் ஆதித்யா தற்போது ‘டெவில்’ எனும் படத்தை இயக்கி உள்ளார். இதில், விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மிஷ்கின் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், முதலில் தனது தம்பி ஆதித்யா என்னிடம் வந்து உதவி இயக்குநராக சேர்த்திக் கொள்ளுங்கள் என்று கேட்டபோது, அவனை நான் காலில் இருந்த செருப்பால் அடித்தேன். குடும்பத்தில் கஷ்டங்களை சந்தித்து, பெற்றோர் இல்லாமல் ஏழ்மையாக இருந்த நபர்களால் மட்டும்தான் சிறந்த திரைப்படங்களை வழங்க முடியும். நானும் அப்படிப்பட்ட நபர்களை தான் நானும் உதவி இயக்குநர்களாக சேர்த்திக் கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

MUST READ