Homeசெய்திகள்சினிமாசூர்யா நல்ல மனிதர்...அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்... இயக்குனர் மிஸ்கின் பேச்சு!

சூர்யா நல்ல மனிதர்…அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்… இயக்குனர் மிஸ்கின் பேச்சு!

-

இயக்குனர் மிஸ்கின், நடிகர் சூர்யா குறித்தும் கங்குவா திரைப்படம் குறித்தும் பேசியுள்ளார்.சூர்யா நல்ல மனிதர்...அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்... இயக்குனர் மிஸ்கின் பேச்சு!

சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி கங்குவா எனும் திரைப்படம் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் படம் வெளியாவதற்கு முன்பு படக்குழுவினர் கொடுத்த பில்டப்கள் இந்தப் படத்தை ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்ய காரணமாக அமைந்தது. இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான மிஸ்கின், விழா மேடை ஒன்றில் நடிகர் சூர்யா குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “கங்குவா படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் ரசிகர்கள் கொஞ்சம் கருணையோடு பார்க்க வேண்டும். கங்குவா படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை நான் பார்த்தேன். கொஞ்சம் கருணையோடு அதை விமர்சனம் செய்திருக்கலாம். சூர்யா ஒரு சிறந்த நடிகர். அழகான நடிகர்.சூர்யா நல்ல மனிதர்...அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்... இயக்குனர் மிஸ்கின் பேச்சு! அவரை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று சிவாஜி, எம்ஜிஆர் போன்ற நடிகர்கள் நம்முடன் இல்லை. ஆனால் அவர்களுடன் பணியாற்றிய சிவகுமார் இருக்கின்றார். அவரது குடும்பத்தில் இருந்து வந்த சூர்யா மிகவும் நல்ல மனிதர். அவரை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் எனக்கு படம் பண்ணி தருவார் என்று இதையெல்லாம் நான் சொல்லவில்லை. அப்படியே அவர் கொடுத்தாலும் அந்த வாய்ப்பை நான் ஏற்க மாட்டேன். ஆனால் கொஞ்சம் கருணையோடு ரசிகர்கள் இருக்க வேண்டும்” என்றார் மிஸ்கின்.

MUST READ