நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2… வெளியானது புது அப்டேட்…
- Advertisement -
கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கி தமிழ் திரையில் இயக்குநராக அறிமுகம் ஆகினார். இப்படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். இத்திரைப்படமும் ஏகபோக வரவேற்பை பெற்றது. டார்க் காமெடி மன்னன் என நெல்சனை ரசிகர்கள் கொண்டாடினர். இதையடுத்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார்.
பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதையடுத்து ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. படத்தில் ரஜினியுடன், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட புகழ் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி, மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலித்தது. இதைத் தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகமும் உருவாக உள்ளது. இந்நிலையில், ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும், படப்பிடிப்புக்கான பணிகளை தற்போது நெல்சன் திலீப்குமார் தொடங்கி விட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இத்திரைப்படத்திற்கு ஹக்கூம் என்று தலைப்பு வைக்கப்பட உள்ளனராம்.