Homeசெய்திகள்சினிமாஅமரன் 100வது நாள்.... இந்து ரெபேக்கா வர்கீஸ் குறித்து ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்ட உருக்கமான பதிவு!

அமரன் 100வது நாள்…. இந்து ரெபேக்கா வர்கீஸ் குறித்து ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்ட உருக்கமான பதிவு!

-

- Advertisement -

கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் அமரன் திரைப்படம் வெளியானது. அமரன் 100வது நாள்.... இந்து ரெபேக்கா வர்கீஸ் குறித்து ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்ட உருக்கமான பதிவு!மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும், நடிகை சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸாகவும் நடித்திருந்தார்கள். இருவரும் நடித்திருந்தார்கள் என்று சொல்வதை விட அவர்களைப் போலவே வாழ்ந்திருந்தனர். அந்த அளவிற்கு இவர்களின் நடிப்பும் ராஜ்குமார் பெரியசாமியின் திரைக்கதையும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை ரஜினி, விஜய் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பாராட்டினர்.

இந்நிலையில் இந்த படம் நேற்றுடன் (பிப்ரவரி 7) 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் குறித்து உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்து ரெபேக்கா வர்கீஸ் மேடம், அமரன் படத்தின் நூறாவது நாளில் இதை எழுத விரும்பினேன். நீங்கள் ஆளுமையின் மறு உருவம். நீங்கள் எடுத்த அனைத்து முடிவுகளுக்கும் நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை படமாக எடுக்க எங்களுக்கு அனுமதி அளித்ததற்கு வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். மேஜர் மோகன் வரதராஜனை விலையாகக் கொண்டிருக்கும் இந்துவின் உலகம் தான் அமரன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராஜ்குமார் பெரியசாமி, “அப்பா வரதராஜன் சார், அம்மா கீதா மேடம் உங்களைப் பற்றி எழுத எனக்கு போதுமான வார்த்தைகள் இல்லை. மேஜர் முகுந்த் சார் எதிர்பார்த்த உண்மையான ஹீரோக்கள் நீங்கதான். உங்களின் தியாகத்திற்காக ஒட்டுமொத்த தேசமே உங்களை எதிர்நோக்கி நிற்கிறது.

முகுந்த் சாரை இந்த உலகிற்கு கொண்டு வந்து ஒரு அழியா நாயகனாக வளர்த்து தியாகம் செய்ததற்கு உங்கள் சாதனையின் முன் எந்த வார்த்தையும் தோல்வி அடைந்து விடும். உங்களுக்கு என்னுடைய நன்றிகள். அமரனைப் போல் எப்பொழுதும் நீங்களும் நேசிக்கப்படுவீர்கள்” என்று முகுந்த் வரதராஜனின் தாய்- தந்தை குறித்தும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

MUST READ