இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் செல்வராகவன். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களை பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இவர் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தை எப்போது தொடங்குவார்? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோரின் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியானது. இந்த படம் நிகழ்காலத்துடன் கடந்த காலத்தை தொடர்புப்படுத்தும் விதமாகவும், சோழர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு இடையிலான பகையை காட்டும் விதமாகவும் அமைந்திருந்தது. செல்வராகவன் இதனை தனித்துவமான திரைக்கதையில் வித்தியாசமாகவும், உணர்வுபூர்வமாகவும் வெளிப்படுத்தி இருந்தார். அதே சமயம் ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்திற்கு பெரும் பலம் தந்திருந்தது. ஆனால் இந்த படம் திரைக்கு வந்த போது கலவையான விமர்சனங்களை பெற்றது. வளரும் இந்த படத்தை புரிந்து கொள்ள முடியாமல் விமர்சித்து வந்தனர். ஆனால் காலம் கடந்த பின் இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றின் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
“I have ‘Verithamana’ wish to take #AayirathilOruvan2🥵. Mistake is, we announced earlier. #Dhanush will do lead & we can’t take #AO2 without #Karthi🌟. The story is goona be very complicated👀. So we need Producer & 1yr date from actors🤞”
– Selvaraghavan pic.twitter.com/P3y3EtruKt— AmuthaBharathi (@CinemaWithAB) April 5, 2025
அதன்படி அவர் கூறியதாவது, “ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை எடுக்க எனக்கு மிகுந்த ஆசை இருக்கிறது. இதனை முன்கூட்டியே அறிவித்ததுதான் நான் பண்ண தப்பு. ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் இதனை கார்த்தி இல்லாமல் பண்ண முடியாது. கதையும் மிகவும் சிக்கலானது. அதே சமயம் நடிகர்களிடமிருந்து ஒரு வருடம் கால்ஷீட் தேவைப்படும். எனவே அதற்கு தகுந்த மாதிரி தயாரிப்பாளர்கள் எங்களுக்கு தேவை” என்று தெரிவித்துள்ளார்.