Homeசெய்திகள்சினிமாஷாருக்கானுடன் இணைய தயார்... இயக்குநர் ஷங்கர் விருப்பம்...

ஷாருக்கானுடன் இணைய தயார்… இயக்குநர் ஷங்கர் விருப்பம்…

-

கோலிவுட் திரையுலகமே கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். தனது திரைப்படங்களில் பிரம்மாண்டத்தை காட்டி தனக்கென தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார். தமிழ் திரையுலகில் பல புதுமைகளை புகுத்தி இந்திய சினிமாவில் ஒரு படி மேலே சென்ற பெருமை இவருக்கு உண்டு. ஜென்டில்மேன் படத்தில் தொடங்கிய இவரது வெற்றிக்கணக்கு இன்று வரை நீண்டு கொண்டே செல்கிறது.
 தற்போது தமிழில் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல்ஹாசன் நடித்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதேபோல, தெலுங்கில் இவரது இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் ராம்சரண் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கியாரா அத்வாணி, அஞ்சலி, உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தியன் 2 நிகழ்ச்சியில் பேசிய ஷங்கர், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்ற தயார் என விருப்பம் தெரிவித்துள்ளார். எந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு, வேறு சில படங்களுக்காக ஷாருக்கானை சந்தித்ததாகவும், ஆனால், அவை கைகூடவில்லை என்றும் அவர் கூறினார். ஷாருக்கானுக்கு பொருத்தமான கதை அமைந்தால் நிச்சயம் அவருடன் கூட்டணி அமைப்பேன் என இயக்குநர் ஷங்கர் கூறி இருக்கிறார்.

MUST READ