Homeசெய்திகள்சினிமாஇதுதான் இந்த படத்தின் கதை .... 'கேம் சேஞ்சர்' குறித்து பேசிய இயக்குனர் சங்கர்!

இதுதான் இந்த படத்தின் கதை …. ‘கேம் சேஞ்சர்’ குறித்து பேசிய இயக்குனர் சங்கர்!

-

- Advertisement -

சங்கர் இயக்கத்தில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதுதான் இந்த படத்தின் கதை .... 'கேம் சேஞ்சர்' குறித்து பேசிய இயக்குனர் சங்கர்!அதே சமயம் இயக்குனர் சங்கர், ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சங்கர், இந்த படம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “இந்தியன் 2 திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது பரவாயில்லை. அடுத்தது சிறந்ததை வழங்க முயற்சித்து வருகிறேன். மேலும் ஒரு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையேயான மோதல் தான் கேம் சேஞ்சர் படத்தின் கதை ” என்று கூறியுள்ளார்.இதுதான் இந்த படத்தின் கதை .... 'கேம் சேஞ்சர்' குறித்து பேசிய இயக்குனர் சங்கர்!

ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, சுனில் ஆகியோர் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே தற்போது புஷ்பா 2 திரைப்படத்தின் வசூல் 1500 கோடி ரூபாயை நெருங்கியுள்ள நிலையில் அடுத்தது எல்லோரின் கண்களும் கேம் சேஞ்சர் படத்தின் மீதுதான் இருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டது.

MUST READ