இயக்குனர் சங்கர், புஷ்பா 2 படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் நாளை (ஜனவரி 10) உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வர தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அதேசமயம் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் சங்கர், புஷ்பா 2 படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “புஷ்பா 2 படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. புஷ்பாவின் கதாபாத்திரம் நன்றாக இருந்தது. நாடு முழுவதும் அந்த கதாபாத்திரம் பிரபலமாகிவிட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்த மாதிரி சுகுமார் அந்த கதாபாத்திரத்தை எழுதி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
#Shankar about #Pushpa2TheRule
– I watched #Pushpa2, It was Good, The characteristics of #Pushpa was Nice & it is reached big
– All over the country like the character #GameChanger #RamCharanpic.twitter.com/gt16rYtrsq— Movie Tamil (@MovieTamil4) January 9, 2025
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுதும் திரையிடப்பட்ட அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சங்கர் இயக்கத்தின் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் புஷ்பா 2 படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.