Homeசெய்திகள்சினிமாஅவர் ஆழமான நடிப்பை வெளிப்படுத்துவார்.... ராம்சரண் குறித்து பேசிய சங்கர்!

அவர் ஆழமான நடிப்பை வெளிப்படுத்துவார்…. ராம்சரண் குறித்து பேசிய சங்கர்!

-

- Advertisement -

நடிகர் ராம்சரண் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அவர் ஆழமான நடிப்பை வெளிப்படுத்துவார்.... ராம்சரண் குறித்து பேசிய சங்கர்!இதைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் ராம்சரண். இந்த படத்தை ஶ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க திருநாவுக்கரசு இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். தமன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் அரசியல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இதில் ராம்சரண் தவிர எஸ் ஜே சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அவர் ஆழமான நடிப்பை வெளிப்படுத்துவார்.... ராம்சரண் குறித்து பேசிய சங்கர்!இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய இயக்குனர் சங்கர், ராம்சரண் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜு சொன்னார். அப்போது எனக்கும் அது சரியாக தோன்றியது. ராம்சரண் தன்னுடைய ஆழமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். எந்த மாதிரியான கதையாக இருந்தாலும் அவர் அதை சிறப்பாக கையாள்வார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ