Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' படம் பற்றி நீங்கள் நினைப்பது உண்மை அல்ல..... இயக்குனர் சங்கர்!

‘இந்தியன் 2’ படம் பற்றி நீங்கள் நினைப்பது உண்மை அல்ல….. இயக்குனர் சங்கர்!

-

கடந்த 1996 இல் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு தற்போது பல வருடங்கள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.'இந்தியன் 2' படம் பற்றி நீங்கள் நினைப்பது உண்மை அல்ல..... இயக்குனர் சங்கர்! இந்தியன் 2 – ZERO TOLERANCE என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா என பல நடிகர்கள் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 12ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.'இந்தியன் 2' படம் பற்றி நீங்கள் நினைப்பது உண்மை அல்ல..... இயக்குனர் சங்கர்! மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியன் படத்தில் நடித்திருந்த கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படும் நிலையில் சேனாபதியின் தந்தையாகவும் நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கிறார் என்று அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்தியன் 3 படத்தின் மீதுதான் தனது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

எனவே ரசிகர்கள் பலரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனின் காட்சிகள் குறைவாக இருக்கும். இந்தியன் 3யில் தான் அதிகமாக இருக்கும் என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் இயக்குனர் சங்கர் பேசியதாவது, “இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் குறைவான நேரம் தான் தோன்றுவார் என்ற செய்தி உண்மை கிடையாது. படம் முழுவதுமே அவர் தோன்றுவார். அவர் திரையில் இல்லாவிட்டாலும் அவரை பற்றி தான் விவாதம் இருக்கும்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ