அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் பாலிவுட்டிலும் நுழைந்து சாருக் கானை வைத்து ஜவான் எனும் திரைப்படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றி பெற்றார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று தன்னுடைய முதல் படத்திலேயே ஆயிரம் கோடி ரூபாயை தட்டி தூக்கினார் அட்லீ. அடுத்தது இவர் பேபி ஜான் எனும் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. எனவே இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட் கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, “என்னுடைய 6வது படத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட கதையை எழுதி முடிச்சாச்சு. கண்டிப்பாக இது அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருக்கும். இந்த படம் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என்று நான் நினைக்கிறேன். கடவுள் ஆசிர்வாதத்துடன் விரைவில் என்னுடைய அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். நடிகர்கள் தொடர்பான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இயக்குனர் அட்லீ, சல்மான் கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் கசிந்திருந்தது. இதன் மூலம் அவர் சல்மான் கானை இயக்குவது குறித்து தான் பேசுகின்றார் என சமூக வலைதளங்களை ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.