Homeசெய்திகள்சினிமா4 நடிகர்களுக்காக தமிழ் சினிமா இயங்குகிறது - தங்கர் பச்சான்

4 நடிகர்களுக்காக தமிழ் சினிமா இயங்குகிறது – தங்கர் பச்சான்

-

அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான். இவர் பல சிறுகதைகளை தழுவி உணர்வுபூர்வமான படங்களை கொடுத்தவர். தற்போது இவர் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படமும் மேகங்கள் கலைகின்றது என்ற நாவலை தலைவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பாரதிராஜா கௌதம் வாசுதேவ் மேனன் அதிதி பாலன் யோகி பாபு எஸ் ஏ சந்திரசேகர் டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில், முடக்கறுத்தான் என்ற நிகழ்ச்சியில் தங்கர் பச்சான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திரைப்படக் கலை என்பது மக்களை முன்னேற்ற, மேம்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த கலை தற்போது அப்படி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. அதை வணிகமாக பார்த்தவர்கள் கையில்தான் இன்று சினிமா சிக்கிக்கொண்டு இருக்கிறது. . எந்த படம் நம் மனதைச் சிதைக்குமோ, எந்த படம் நம் குழந்தைகளுக்கு காட்டப்படக் கூடாதோ அப்படிப்பட்ட படங்களை ஊக்குவிப்பவர்கள் தான் இங்கு இருக்கின்றனர்.

 

நான்கு நிறுவனங்களுக்காகவும், நான்கு நடிகர்களுக்காகவும் மட்டும் தான் தமிழ் சினிமா இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து முடக்கறுத்தான் படம் என்ன செய்யும் என்று தெரியவில்லை. இது வருத்தப்பட வேண்டிய விஷயம் என தெரிவித்துள்ளார்.

MUST READ