Homeசெய்திகள்சினிமா'GOAT vs OG' அப்டேட் எப்போது வரும்?.... இயக்குனர் வெங்கட் பிரபுவின் பதில்!

‘GOAT vs OG’ அப்டேட் எப்போது வரும்?…. இயக்குனர் வெங்கட் பிரபுவின் பதில்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோட் என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. 'GOAT vs OG' அப்டேட் எப்போது வரும்?.... இயக்குனர் வெங்கட் பிரபுவின் பதில்!விஜயின் 68வது படமாக வெளியான இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து மிரட்டி இருந்தார் விஜய். மேலும் இவருடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, மோகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மாஸான ஆக்சன் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்த வகையில் சுமார் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், கோட் படத்தில் இறுதியில் GOAT vs OG என்ற தலைப்பில் இதன் இரண்டாம் பாகத்திற்கான லீட் காட்சியை வைத்திருந்தார் வெல்கம் பிரபு.'GOAT vs OG' அப்டேட் எப்போது வரும்?.... இயக்குனர் வெங்கட் பிரபுவின் பதில்! இருப்பினும் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளார். எனவே GOAT vs OG திரைப்படத்தில் எப்படி நடிப்பார்? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபுவிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “GOAT vs OG அப்டேட் 2026க்கு பிறகு சொல்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 2026 தேர்தலில் விஜய் வெற்றி பெற்றால் அவர் முழு நேர முதலமைச்சராகிவிடுவார். அப்படி இல்லை என்றால் மீண்டும் சினிமாவிற்கு வந்து விடுவார் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் GOAT vs OG தொடர்பாக வெங்கட் பிரபு என்ன அப்டேட் கொடுக்கப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ