நடிகர் விஜய் கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் வெளியாகி வரும் நிலையில் விரைவில் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் நடந்த பேட்டியில் தி கோட் என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தின் கதை குறித்து பேசி உள்ளார். “தீவிரவாதத்திற்கு எதிரான ஸ்வாட்களை அடிப்படையாக வைத்து கற்பனை கதையில் உருவாகியுள்ள படம் தான் தி கோட். தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் இவர்கள் பல மிஷன்களை கையாளுகின்றனர். இருப்பினும் இவர்களின் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் நிகழ் காலத்தில் ஒரு சவாலாக மாறுகிறது. அதை எப்படி அவர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்கிறார்கள் என்பதை பரபரப்பான திரில்லர் கதைக்களத்தில் சொல்வதுதான் இந்த படம்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -