வெங்கட் பிரபு இயக்கத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளிவர உள்ள படம் கோட். இப்படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில்,இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து சூப்பர் ரீச் கொடுத்த நிலையில், படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வெங்கட் பிரபு மற்றும் மோகன்லால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலர் கோட் படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போகிறாரா என்ற கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
மோகன்லால் நடித்துள்ள பரோஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது வெங்கட் பிரபுவை சந்தித்தபோது எடுத்த புகைப்படம் இதுவாகும் என கூறி கோட் படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.