இந்தோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசன் சார்பில் நடக்கும் 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த 14-ம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. ந்த விழாவில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன. குறிப்பாக 57 நாடுகளைச் சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அயோத்தி, மாமன்னன், போர் தொழில், செம்பி, இராவணக்கோட்டம், அநீதி போன்ற படங்கள் திரையிடப்பட்டன. இந்த படங்களில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான அயோத்தி திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது சிறந்த படமாக உடன்பால் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. மாமன்னன் படத்திற்காக வடிவேலுக்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கப்பட்டது. சிறந்த நடிகைக்காக அயோத்தி பட ப்ரீத்தி அஸ்ரானிக்கு கொடுக்கப்பட்டது.
இதில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, விடுதலை படத்தின் முதல் பாகத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு மேடையில் பேசிய வெற்றிமாறன், எனது படங்களில் அதிக சீன்களில் டப்பிங் சரியாக இருக்காது. ஆனால், அனைத்து படங்களையும் நிறைய குறைகளோடும், தவறுகளோடும் தான் எடுத்து முடிக்கிறோம். இருந்தாலும், ரசிகர்கள் அதை ஏற்றுக்கொண்டு பாராட்டுகிறார்கள். அதே சமயம் கதையின் நோக்கம் படத்தின் குறைகளை மறக்கடிக்கச் செய்வதாக தெரிவித்துள்ளார்.