Homeசெய்திகள்சினிமாஎன்னைய கெட்ட வார்த்தை பேச வைக்காதீங்க... ஆத்திரமடைந்த நட்டி நடராஜ்!

என்னைய கெட்ட வார்த்தை பேச வைக்காதீங்க… ஆத்திரமடைந்த நட்டி நடராஜ்!

-

- Advertisement -

என்ன கெட்ட வார்த்தை பேச வைக்காதீங்க என்று நட்டி நடராஜ் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர் நட்டி நடராஜ். பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதையடுத்து நடிகராகவும் களமிறங்கி நல்ல வரவேற்பைப் பெற்றார். ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.

அதையடுத்து தற்போது பல படங்களிலும் அவர் நடித்து வருகிறார். கடைசியாக மோகன் ஜி இயக்கத்தில் பகாசுரன் படத்தில் நட்டி நடராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் “நான் இதுவரை கெட்ட வார்த்தை பேசியதில்லை பேச வைத்து விடாதீர்கள், தயவு செய்து” என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

நட்டி நடராஜ் பெயரில் போலி கணக்கு துவங்கி அதிலிருந்து இயக்குனர் மோகன் ஜியை நம்பாதீர்கள் என்றொரு பதிவு சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது. அதன் காரணமாக கடுப்பானதால் தான் நட்டி இவ்வளவு கோபப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

MUST READ