Homeசெய்திகள்சினிமாசுந்தர். சி படத்தில் நடிக்க கவின் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சுந்தர். சி படத்தில் நடிக்க கவின் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்.சுந்தர். சி படத்தில் நடிக்க கவின் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? சிவகார்த்திகேயனை போல் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்த கவின், ஆரம்பத்தில் பீட்சா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். அடுத்ததாக லிஃப்ட் டாடா உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றிப் பாதைக்கு நகர்ந்து சென்றார். குறிப்பாக கடந்த ஆண்டு கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் நடிகர் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கவினுக்கு பல பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. அதன்படி இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்திலும், நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் கவின். இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுந்தர் சி இயக்கவிருக்கும் கலகலப்பு 3 திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வந்தது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. சுந்தர். சி படத்தில் நடிக்க கவின் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?அதேசமயம் சுந்தர் சி தரப்பில் கலகலப்பு 3 திரைப்படத்தில் கவின் நடிப்பது குறித்து மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கிடையில் நடிகர் கவினிடம் இது சம்பந்தமான பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் நடிகர் கவின், சுந்தர் சி படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும், சுந்தர் சி கவினுக்கு 1.5 கோடி சம்பளம் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே கவின் எதிர்பார்த்த சம்பளத்தை விட சுந்தர் சி தரப்பில் பேசப்பட்ட சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதால் கவின், சுந்தர் சி கூட்டணியில் உருவாக உள்ள படம் தொடர்பாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லையாம். ஆகையால் சுந்தர் சி இயக்க இருக்கும் கலகலப்பு 3 திரைப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ