சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படமானது 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், ,விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், வித்யூத் ஜம்வால் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்தில் நடிக்க உள்ளார். தற்போதைக்கு SK 24 என்று சொல்லப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாகவும் வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் நடிக்கப் போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஏற்கனவே இந்த கூட்டணி டான் படத்தில் இணைந்திருந்த நிலையில் அந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதன் காரணமாகவே இவர்களுடைய அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு பாஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.