Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

‘தளபதி 69’ படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

-

தளபதி 69 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடைசியாக கோட் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அடுத்தது இவர் தனது 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். 'தளபதி 69' படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?இந்த படத்திற்கு தளபதி 69 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இந்த படத்தை இயக்க இருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்று (அக்டோபர் 1) மாலை 5 மணி அளவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் மற்ற நடிகர்களின் உருவங்கள் மறைக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது. எனவே அந்த நடிகர்கள் யார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 'தளபதி 69' படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், மமிதா பைஜூ, பிரியாமணி ஆகியோர் தளபதி 69 படத்தில் நடிக்கப் போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அந்த நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

MUST READ