நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 1980 காலகட்டத்தின் போது சத்யராஜ் மடியில் பான் இந்திய நடிகர் ஒருவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நடிகர் வேறு யாரும் அல்ல. புஷ்பா பட வில்லன் பகத் பாசில் தான்.
நடிகர் பகத் பாசில் மலையாள சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது பான் இந்திய நடிகராக உருவெடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இவர் கண்களின் மூலமே வெவ்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி விடுவார். அந்த வகையில் இவரை எல்லோரும் நடிப்பு அரக்கன் என்று கூறுவார்கள். இவர் தமிழில் வேலைக்காரன், மாமன்னன் போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக பகத் பாசில் ஆவேசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் சத்யராஜ் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே ஆகிய படங்களின் படப்பிடிப்பு தளத்தில் சத்யராஜ் மடியில் பகத் பாஸில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நிலையில் தற்போது இத்தனை வருடங்கள் கழித்து அந்த புகைப்படத்தை பகத் பாசில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.