சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியரும் வில்லனாக ராணா டகுபதியும் நடித்திருக்கின்றனர். மேலும் அமிதாப் பச்சன் இந்த படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார். அடுத்தது பகத் பாசில், துஷாரா விஜயன், அபிராமி, ரித்திகா சிங் என பல பிரபலங்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தினை லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா என்ற (செப்டம்பர் 20) சென்னையில் நடைபெற இருக்கிறது. அதே சமயம் இன்று மாலை 7 மணிக்கு படத்தின் டீசரையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை பட குழுவினர் அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இறுதியாக ரஜினியின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிடவில்லை. எனவே அவருடைய கதாபாத்திரம் குறித்து இன்று நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்தது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் தற்போது இது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அமிதாப் பச்சனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்திருக்கிறாராம். இந்தி மொழித் தவிர மற்ற மொழிகளில் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்திருப்பதாகவும் இதனை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அமிதாப் பச்சன் குரலாக மாற்றப் போவதாகவும் சொல்லப்படுகிறது.