விடாமுயற்சி படம் குறித்து மகிழ் திருமேனி பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மகிழ் திருமேனி தடையறத் தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டீசரும் ட்ரைலரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதேசமயம் சவதீகா எனும் பாடலும் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “விடாமுயற்சி படத்தின் மூலக்கதை என்னுடையது இல்லை. நான் அஜித் சாரை வைத்து பண்ண நினைத்தது ஒரு ஆக்சன் திரில்லர் படம். விடாமுயற்சி கதையை அஜித் சார் தான் சொன்னார். அஜித் சாரின் இமேஜுக்கும் விடாமுயற்சி படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும் தொடர்பு இருக்காது. மேலும் இது ஒரு மாஸ் என்டர்டெயினர் படம் இல்லை. அதை விடாமுயற்சி படத்தின் ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டாம். அஜித் சார் தான் இப்படி படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டார். நம்மில் ஒருத்தர் ஹீரோவாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுதான் விடாமுயற்சி படத்தின் கதை நிச்சயம் இந்த படம் சுவாரஸ்யமான படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.