நடிகர் விஷால் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக ரத்னம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ள நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோஸ் நிறுவனமும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயார்த்துள்ளது. ஆக்சன் கலந்த கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படமானது வருகின்ற ஏப்ரல் 26 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி யோகி பாபு, கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையில் நடிகர் விஷால் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் 2026 இல் போட்டியிட இருப்பதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஷாலிடம் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விஷால், “2026 இல் அரசியலுக்கு வருவேன் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எந்த கட்சியுடனும் கூட்டணி சீட்டு ஒதுக்கீடு என்பது பற்றி யோசிக்க கூடாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை நினைத்து மட்டுமே கட்சியை தொடங்கி விட வேண்டும். இப்போதும் சொல்கிறேன் என்னை 2026 இல் அரசியலுக்கு வர விடாதீங்க. நீங்கள் மக்களுக்கு செய்தால் நான் வர வேண்டிய அவசியம் இருக்காது. நான் படங்களின் நடித்துவிட்டு போய்க் கொண்டே இருப்பேன்” என்று பதிலளித்திருக்கிறார்.
- Advertisement -