ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் டபுள் இஸ்மார்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராம் பொத்தினேனி. இவர் கடைசியாக வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து டபுள் இஸ்மார்ட் எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படமானது கடந்த 2019ல் வெளியான இஸ்மார்ட் ஷங்கர் படத்தில் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது. டபுள் இஸ்மார்ட் படத்தினை முதல் பாகத்தை இயக்கியிருந்த பூரி ஜெகன்நாத் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராம் பொத்தினேனி உடன் இணைந்து சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது பூரி ஜெகன்நாத்தின் தயாரிப்பிலும் மணி ஷர்மாவின் இசையிலும் உருவாகி இருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பாக படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். மேலும் மும்பை போன்ற பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.