Homeசெய்திகள்சினிமாதனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ..... ரீ ரிலீஸ் செய்யப்படும் 'புதுப்பேட்டை'!

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ….. ரீ ரிலீஸ் செய்யப்படும் ‘புதுப்பேட்டை’!

-

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்கப் போகிறது.தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ..... ரீ ரிலீஸ் செய்யப்படும் 'புதுப்பேட்டை'!

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது 50வது படமான ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷே இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இதில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் சமீபத்தில் படத்தின் மிரட்டலான ட்ரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அடுத்ததாக இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி தனுஷின் பிறந்த நாளை ஒட்டி உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது.தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ..... ரீ ரிலீஸ் செய்யப்படும் 'புதுப்பேட்டை'!

அதேசமயம் தனுஷ் பிறந்த நாளுக்கு ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து படைக்கும் விதமாக கடந்த 2006 இல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படமும் ஜூலை 26 இல் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சோனியா அகர்வால், சினேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் நடிகர் தனுஷ் முதன் முறையாக இந்த படத்தில்தான் கேங்ஸ்டராக நடித்திருந்தார்.  ஏற்கனவே செல்வராகவன் விரைவில் புதுப்பேட்டை 2 திரைப்படத்தை இயக்கப் போவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ