Homeசெய்திகள்சினிமாடாக்டர் ராமதாஸின் பயோபிக் படம்...... விலகிய சரத்குமார்..... மிரட்ட வரும் பிரபல நடிகர்!

டாக்டர் ராமதாஸின் பயோபிக் படம்…… விலகிய சரத்குமார்….. மிரட்ட வரும் பிரபல நடிகர்!

-

பாஜக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தது. அதன்படி இந்த படத்தை இயக்குனர் சேரன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸாக நடிகர் சரத்குமார் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் செய்திகள் வெளியானது.டாக்டர் ராமதாஸின் பயோபிக் படம்...... விலகிய சரத்குமார்..... மிரட்ட வரும் பிரபல நடிகர்! இருப்பினும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் கூட டாக்டர் ராமதாஸ், தனது வாழ்க்கை வரலாறு படமாக வாய்ப்பில்லை என தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படம் தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது டாக்டர் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க மறுத்துவிட்டாராம். ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தல் வர விருப்பதாலும், இருவரும் வெவ்வேறு சாதி பின்னணி கட்சியினர் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.டாக்டர் ராமதாஸின் பயோபிக் படம்...... விலகிய சரத்குமார்..... மிரட்ட வரும் பிரபல நடிகர்! எனவே, அடுத்தபடியாக நடிகர் பிரகாஷ்ராஜிடம் ராமதாஸின் பயோட்பிக் படம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். பிரகாஷ்ராஜ் உடனே கதையை கேட்டு வியந்து, படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். இதன் மூலம் டாக்டர் ராமதாஸ் பிரகாஷ்ராஜ் நடிக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆகையால் படம் சம்பந்தமான அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ