டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரின் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவருடைய முதல் படமே இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து இவர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார்.
இப்படம் இன்று (பிப்ரவரி 21) திரையரங்கங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பூம்பாறை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் சிம்புவின் 51வது படத்தை இயக்குவதற்கும் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.