டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் அதே படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து லவ் டுடே எனும் திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். இந்த படம் பிரதீப் ரங்கநாதனை இந்திய அளவில் பிரபலமாக்கியது. இதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் விக்னேஷ் சிவன் நடிப்பில் உருவாகும் எல்ஐகே படத்தில் நடிக்கிறார். மேலும் ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், ஜார்ஜ் மரியான், கயது லோகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று (ஜனவரி 2) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோவும் நேற்று (ஜனவரி 1) புத்தாண்டு தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.
டிராகன் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இதற்கு இசை அமைக்கிறார். அடுத்தது இந்த படம் 2025 பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.