தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, டிராகன் படம் குறித்து பேசி உள்ளார்.
லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டிராகன். இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், மிஸ்கின், கயடு லோகர், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படமானது வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.
#Dragon Telugu Pre Release Event ⭐: – Archana Kalpathi
“It’s not a Love film.. It’s not a College film.. It’s a Family Entertainer and a Meaningful Film..”pic.twitter.com/pnGwW1Nikn
— Laxmi Kanth (@iammoviebuff007) February 16, 2025
இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் விழாவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்த படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “இந்த படம் காதல் படம் இல்லை. காலேஜ் படமும் இல்லை. அர்த்தமுள்ள படம். குடும்பப் பொழுதுபோக்கு படம். வெற்றி, தோல்விகளை பற்றி சொல்லும் படம். நாங்கள் இந்த படத்தின் மூலம் ஏதோ ஒன்றை சொல்லியிருக்கிறோம். இந்த படம் ஏ ஜி எஸ் நிறுவனத்திற்கு மிகவும் ஸ்பெஷலான படம்” என்று தெரிவித்துள்ளார்.