Homeசெய்திகள்சினிமா'STR 51' படத்தில் இணையும் 'டிராகன்' படக் கூட்டணி!

‘STR 51’ படத்தில் இணையும் ‘டிராகன்’ படக் கூட்டணி!

-

- Advertisement -

டிராகன் படக் கூட்டணி STR 51 படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.'STR 51' படத்தில் இணையும் 'டிராகன்' படக் கூட்டணி!

சிம்பு நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு தனது 49 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். அதே சமயம் நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களை இயக்கி முக்கியமான இயக்குனராக மாறியுள்ள அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் நடிகர் சிம்புவின் 51வது படமாகும். 'STR 51' படத்தில் இணையும் 'டிராகன்' படக் கூட்டணி!இந்த படத்தில் சிம்பு God of love என்ற கேரக்டரில் நடிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. எனவே தற்காலிகமாக STR 51 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் 2026-இல் இப்படம் வெளியாகும் எனவும் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் அப்டேட் கொடுத்திருந்தார். இதற்கிடையில் இந்த படத்தில் சாய் அபியங்கர் இசையமைப்பாளராக இணைய வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியானது. 'STR 51' படத்தில் இணையும் 'டிராகன்' படக் கூட்டணி!ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய லியோன் ஜேம்ஸ் தான் STR 51 படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றப் போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.

MUST READ