- Advertisement -
நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் மறைவால், நாளை ஒரு நாள் முழுவதும் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உள்ளதாகவும், இதனால் அவருக்கு செற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகும் அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணி அளவில் அவர் உயிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியானது. அவரது மறைவு செய்தி அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் ஒரு நடிகராய் வெற்றி பெற்று, புரட்சிகலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என்று எங்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர்; தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக பதவி வகித்து தமிழ் திரையுலகை கௌரவப்படுததிய
எங்கள் கேப்டன் விஜயகாந்த் இன்று இயற்கை எய்தினார். pic.twitter.com/Vc7A1O3hFZ— Tamil Film Producers Council (@TFPCOffl) December 28, 2023