துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் சீதாராமம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். அபிலாஷ் ஜோசி இதனை இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங் பிரசன்னா, அனிகா சுரேந்திரன், சபீர் கல்லாரக்கல் மற்றும் பலர் நடித்துள்ளனர். வேஃப்பரர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரகுமான் இணைந்து இசை அமைத்துள்ளனர். மலையாளத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்தின் கலாட்டாக்காரன் எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.