Homeசெய்திகள்சினிமாஅனிமல் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்!

அனிமல் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்!

-

நடிகர் துல்கர் சல்மான் அனிமல் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.அனிமல் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்!

நடிகர் துல்கர் சல்மான் தற்போது தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இவரது நடிப்பில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நாளை (நவம்பர் 28) இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. அதேசமயம் துல்கர் சல்மான் காந்தா போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் அனிமல் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் எனவும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அனிமல் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்!எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சந்தீப் ரெட்டி வங்கா. அதைத் தொடர்ந்து இவர் அனிமல் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றன. அடுத்தது சந்தீப் ரெட்டி வங்கா, பிரபாஸ் நடிப்பில் ஸ்பிரிட் எனும் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ