துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான், சீதாராமம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அதே சமயம் தொடர்ந்து பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே காந்தா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, ராம்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ், ஸ்ரீஹரா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31ஆம் நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது, லக்கி பாஸ்கர். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது. அந்த வகையில் இந்த படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 26.2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.