Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மான் நடிக்கும் காந்தா... வெளியானது புதிய அப்டேட்...

துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா… வெளியானது புதிய அப்டேட்…

-

துல்கர் சல்மான் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இருப்பினும், இவர் தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் நடித்த ‘சீதாராமம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அபிலாஷ் ஜோசி இயக்கத்தில் ‘கிங் ஆப் கோத்தா’ திரைப்படம் இறுதியாக துல்கர் நடிப்பில் வெளியானது.
இதைத் தொடர்ந்து தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் லக்கி பாஸ்கர். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். படத்தில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் செப்டம்பரம் மாதம் 27-ம் தேதி வெளியாகிறது.
இதனிடையே துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படமும் அறிவிக்கப்பட்டது. பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனரான செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்குகிறார். மேலும், இப்படத்திற்கு காந்தா என்று தலைப்பு வைக்கப்பட்டு கடந்த ஆண்டே போஸ்டர் வெளியானது. தற்போது இப்படத்தை கையில் எடுத்துள்ளார் துல்கர் சல்மான். அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், படத்தில் துல்கல் சல்மானுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ