கலவையான விமர்சனம்… சுமாரான வசூல்… டன்கி விவரம் இதோ
- Advertisement -

பாலிவுட்டின் ஜாம்பவான் நடிகர் ஷாருக்கான். இந்தியில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வந்தாலும் இந்தியா முழுவதும் அவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இந்தி படங்களில் மட்டும் நடித்து வந்த ஷாருக்கான் அண்மையில் நடித்த ஜவான் படம் தமிழிலும் வெளியானது. தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லீ இப்படத்தை இயக்கினார். நயன்தாரா, ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் ஆகியோரின் கூட்டணியில் வெளியான ஜவான் படம் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பட்டையை கிளப்பியது.

இதைத் தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள புதிய திரைப்படம் டன்கி. இதில் டாப்ஸி, விக்கி கௌசல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் இந்தி மொழியில் மட்டும் வெளியானது. இத்திரைப்படம் கடந்த 20 நாட்களில் சுமார் 444 கோடி ரூபாய் வசூலை பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜாவன் மற்றும் பதான் ஆகிய இரண்டு படங்களும் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், டன்கி திரைப்படம் வசூலில் எதிர்பார்த்ததை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.