Homeசெய்திகள்சினிமாதுரை செந்தில்குமார், நயன்தாரா கூட்டணியின் புதிய படம்..... கேமியா ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்!

துரை செந்தில்குமார், நயன்தாரா கூட்டணியின் புதிய படம்….. கேமியா ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்!

-

துரை செந்தில்குமார், நயன்தாரா கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.துரை செந்தில்குமார், நயன்தாரா கூட்டணியின் புதிய படம்..... கேமியா ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்!எதிர்நீச்சல், கொடி, காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் துரை செந்தில்குமார். கடைசியாக இவர் சூரி நடிப்பில் கருடன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்தது லெஜெண்ட் சரவணன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் துரை செந்தில்குமார். மேலும் இவர், விஷால் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவின் 81 வது படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகி இருந்தார் துரை செந்தில்குமார். அதன்படி விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இந்த படம் தொடர்பான அறிவிப்பு போஸ்டரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதன் பிறகு படமானது அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு துரை செந்தில்குமார் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது நயன்தாரா 81 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. துரை செந்தில்குமார், நயன்தாரா கூட்டணியின் புதிய படம்..... கேமியா ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்!அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் தான் நயன்தாராவின் 81ஆவது படத்தில் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பர் என்பதால் இதற்கு சிவகார்த்திகேயன் ஓகே சொல்லிவிடுவார் எனவும் கூறப்படுகிறது. விரைவில் படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ