சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை ஜெய் பீம் படத்தில் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். எஸ் ஆர் கதிர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு மும்பை ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன்படி சமீபத்தில் நடிகை அபிராமி தனது டப்பிங் பணிகளை தொடங்கி இருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகை துஷாரா விஜயன் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை துஷாரா விஜயன், கடந்த ஜூலை 26 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறார். அடுத்ததாக வேட்டையன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள துஷாரா, தனது அடுத்த சம்பவத்திற்கு தயாராகி வருகிறார் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.