தமிழ் சினிமாவில் துஷாரா விஜயன் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராவார். இவர் அநீதி, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து பெயர் பெற்றுள்ளார். மேலும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் வீர தீர சூரன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துஷாரா. ரஜினியின் 170வது படமாக உருவாகும் இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், சென்னை, ஐதராபாத், மும்பை போன்ற பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன் பின்னர் தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் பின்னணி வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இப்படம் 2024 நாள் அக்டோபர் மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் வேட்டையன் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “எந்த ஒரு நடிகைக்கும் ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ரஜினி சாரை முதன்முறையாக பார்க்க போகும்போது பதட்டத்தில் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. முதல் நாள் முதல் ஷாட் ரஜினி சாருடன் தான். அதுவும் ரஜினி சாருடன் இணைந்து நடித்தது எனக்கு கனவு மாதிரி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவருடன் இணைந்து நடித்தது நல்ல ஒரு விருந்தாக உணர்கிறேன். வேட்டையன் படத்தில் எனக்கு மிகவும் ஸ்ட்ராங்கான ரோல்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -