Homeசெய்திகள்சினிமாவாக்காளர் பட்டியலில் பிரபல நடிகை பெயர் நீக்கம்... வாக்குச்சாவடியில் நடிகை அதிர்ச்சி... வாக்காளர் பட்டியலில் பிரபல நடிகை பெயர் நீக்கம்… வாக்குச்சாவடியில் நடிகை அதிர்ச்சி…
- Advertisement -

மலையாளத்தில் வெளியாகி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம் பிரேமலு. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. முதலில் வெளியான மொழி மலையாளமாக இருந்தாலும், படம் ஹிட் அடிக்கவே, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிரேமலு திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு, திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் மமிதா பைஜூ. இவர் இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவர் கவனம் ஈர்த்துள்ளார். தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்த ரெபல் படத்தில் நடித்திருந்தார்

இவர் இன்று கேரளாவில் இரண்டாம் கட்டமாக நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார். ஆனால், இவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. மகள் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் அவரது பெயர் வாக்காளர் பட்டியில் உள்ளதா என பார்க்க முடியாமல் போய்விட்டது என அவரது தந்தை பைஜூ தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் கமிஷன் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், யூத் ஜகானாக கேரளாவில் தேர்வு செய்யப்பட்டவர் மமிதா பைஜூ. அப்படிப்பட்டவரின் பெயரே வாக்காளர் பட்டியலில் இருந்து விடுப்பட்டுப்போன சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.