Homeசெய்திகள்சினிமாமஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

-

மோலிவுட்டை தாண்டி பல மொழிகளில் ஹிட் அடித்த திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாள பிரபலங்கள் மட்டுமன்றி தமிழ் நட்சத்திரங்களும் பாராட்டினர். இத்திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது.

இதனிடையே, அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர், மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடி முதலீடு செய்தேன். லாபத்தில் 40 சதவிகிதம் தருவதாக கூறி மோசடி செய்துவிட்டனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி படத்தின் தயாரிப்பாளர் சவுபின் சாஹிர், ஷான் ஆண்டனி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. படத்தின் மூலம் கிடைத்த பணத்தை கருப்பு பணமாக மறைத்து வைத்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

MUST READ