ரெட்ரோ படம் குறித்து எடிட்டர் ஷபிக் முகமது பேசியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இந்த படம் ஆக்சன் கலந்த காதல் படமாக உருவாகியிருக்கிறது. அதாவது கார்த்திக் சுப்பராஜின் படங்கள் பெரும்பாலும் கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் இருக்கும். ஆனால் அவர் முதன்முதலாக லவ் ஸ்டோரியை கையில் எடுத்திருக்கிறார். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் இப்படத்திலிருந்து வெளியான அடுத்தடுத்த பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. மேலும் இப்படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் எடிட்டர் ஷபிக் முகமது, ரெட்ரோ படத்தின் இன்ட்ரோ, இன்டர்வெல், கிளைமாக்ஸ் ஆகியவை பற்றி சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்த படத்தில் சூர்யா சாரின் இன்ட்ரோ சீன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுபோன்ற இன்ட்ரோவை நான் இதுவரை பார்த்ததில்லை.
#Retro interval will be unique and fresh. Definitely a new attempt 🔥 pic.twitter.com/e7KDeYH3Pg
— Naveen (@NaveenSuriya_FC) April 22, 2025
அதற்காக அசாதாரணமானது என்று நான் குறிப்பிடவில்லை. இப்படியும் இன்ட்ரோ இருக்குமா? என்பது போல் புதிதாகவும், வித்தியாசமானதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். அடுத்தது இடைவேளை ஸ்க்ரப்ட்டை படிக்கும் போது, கார்த்திக் சுப்பராஜிடம் இன்டர்வெல் வேற மாதிரி இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு அவர் இப்படித்தான் நம்ம இன்டர்வல் எடுக்க போகிறோம் என்று சொன்னார். கிளைமேக்ஸ் என்பது கார்த்திக் சுப்பராஜை பொறுத்தவரை அவர் எப்படி கொண்டு செல்வார் என்பது உங்களுக்கே தெரியும். இந்த மூன்று இடங்களிலுமே நான் நம்பிக்கையாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.